குரு சித்தானந்தா சுவாமிகள் சித்தர் ஆலயத்தில் நடைபெற்ற 188ஆம் ஆண்டு குருபூஜை
புதுச்சேரி பிரசித்தி பெற்ற குரு சித்தானந்தா சுவாமிகள் சித்தர் ஆலயத்தில் நடைபெற்ற 188ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தானந்தா சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 188வது ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிேஷகம் செய்து, குருபூஜை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடு மற்றும் கலசாபிேஷகம் தொடர்ந்து, அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.