அதனால் தான் அவரால் இயல்பாக நடிக்க முடிந்தது… நடிகர் சூரி
ஐஸ்வர் லக்ஷ்மி பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு மணிரத்தினம் அவருக்கு ThugLife படத்திலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்படுவதில்லை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் வருவதில்லை அதனால் தெலுகு படத்தில் நடிப்பத்தில்லை என்று கூறிய ஐஸ்வர்யா லட்சுமி மாமன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி டாக்டராக நடித்தார்’ டாக்டர் கதாபாத்திரத்தில் ஒன்றி இயல்பாக நடித்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி கூறி பாராட்டு தெரிவித்து நடிகர் சூரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும்.
படத்தைப் பிரமோட் செய்ய, முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்று கூறியிருக்கிறார்..


