அந்த ஒருவார்த்தை. அரங்கமே அதிருச்சு! Styleலை காப்பியடித்த விஜய்..!? தமிழ்-ல பிடிக்காத…
தளபதி விஜய்யோட கடைசி ஆட்டம்னு சொல்லப்படுற ‘ஜனநாயகன்’ படம் வர்ற ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸாகப் போகுது.
இப்போதே தியேட்டர்கள் எல்லாம் திருவிழா கோலம் பூண ஆரம்பிச்சாச்சு.
இதற்கிடையில், மலேசியாவில் நடந்த பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று டிவியில் ஒளிபரப்பாகி இணையத்தையே அதிர வச்சிருக்கு! ட்ரெய்லரை பார்த்தப்பவே ரசிகர்கள் கணிச்ச மாதிரி, இது தெலுங்குல ஹிட் அடிச்ச ‘பகவந்த் கேசரி’யோட ரீமேக் தான்னு இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு.
ஆனா, நம்ம தளபதிக்கு ஏத்த மாதிரி கதையில நிறைய மாஸான மாற்றங்களை டைரக்டர் எச். வினோத் செஞ்சிருக்காராம்.விழாவை நம்ம VJ ரம்யா மற்றும் RJ விஜய் தொகுத்து வழங்கினாங்க. அப்போ அவங்க விஜய்கிட்ட, *”துரோகம் பற்றி ஏதாவது சொல்லுங்க சார்”*னு ஒரு கேள்வியைக் கேட்டாங்க.
அதுக்கு விஜய் யோசிக்காம சொன்ன ஒரு பதில் இப்போ காட்டுத்தீயா பரவிட்டு இருக்கு:”தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை – துரோகம்!”
அவர் இதைச் சொன்னதும் மலேசிய அரங்கமே கைதட்டலால அதிர்ந்து போச்சு. தளபதி ஏன் இதைச் சொன்னாருன்னு ரசிகர்கள் இப்போ விவாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
சிலர் அவரோட நிஜ வாழ்க்கை அனுபவத்தோட இதை லிங்க் பண்றாங்க, சிலர் இதை அவரோட அரசியல் எண்ட்ரிக்கான ஒரு பவர்ஃபுல் பஞ்ச் வசனமா பாக்குறாங்க. வழக்கமா விஜய் பேசுறதுல நிறைய கட்ஸ் இருக்கும்னு சொல்லுவாங்க.
ஆனா, இந்த முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில அவரோட பேச்சை எந்த ஒரு வெட்டும் இல்லாம அப்படியே ஒளிபரப்பியது ரசிகர்களுக்கு செம குஷியைக் கொடுத்திருக்கு.
படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருக்குற நிலைமையில, விஜய்யோட இந்த “துரோகம்” கமெண்ட் படத்துக்கு எக்கச்சக்கமான ஹைப் ஏத்திருச்சு.
அரசியலுக்குப் போறதுக்கு முன்னாடி விஜய் என்ன சொல்ல வர்றாருன்னு பாக்க ஜனவரி 9-ஆம் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுவோம்!


