in

ஆதரவற்ற முதியவர்கள் சடலத்தை நல்லடக்கம் செய்து வரும் தஞ்சை டாக்டர்

ஆதரவற்ற முதியவர்கள் சடலத்தை நல்லடக்கம் செய்து வரும் தஞ்சை டாக்டர்

 

பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் இணைந்து சுமார் 75க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் சடலத்தை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் தஞ்சை மகாதேவன் இவர் கருணைக் கரங்கள் அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகிறார்.

இவருடன் இணைந்து இவரது மனைவி ராஜேஸ்வரி கருணைக் கரங்கள் அறக்கட்டளை செயலாளராக இருந்து வருகிறார் இவர்கள் இருவரும் சேர்ந்து சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த முதியவர் ஒருவரின் சடலத்தை இருவரும் சேர்ந்து அவரது உடலை மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சுமார் 75க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் சடலத்தை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்து வருவதுடன் தினம்தோறும் சாலை ஓரங்களில் ஆதரவற்றவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்களுக்கு மதிய உணவுகள் வழங்குவதுடன் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரியும் நபர்களை கண்டறிந்து முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதராக மாற்றி உறவினர்கள் மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து உதவி செய்து வருகிறார்.

What do you think?

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

சீர்காழியில் பூங்கா இடத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்