தாடி பாலாஜியின் திடீர் முடிவு!!!?? தவெக-லிருந்து விலகி ல.ஜ.க-வில் ஐக்கியம்….!
நடிகர் விஜய் ஆரம்பிச்ச தமிழக வெற்றி கழகத்துல (TVK) ஒரு பெரிய விக்கெட் விழுந்திருக்கு. ஆரம்பத்துல இருந்து விஜய்க்கு பயங்கர சப்போர்ட்டா இருந்த நடிகர் தாடி பாலாஜி, இப்போ அந்தக் கட்சியில இருந்து விலகி ஒரு புதுக் கட்சியில சேர்ந்துட்டாரு.
தாடி பாலாஜி விஜய்யோட தீவிர ரசிகர். எந்த அளவுக்குன்னா, தன்னோட நெஞ்சுல விஜய்யோட முகத்தையே பச்சைக் குத்தி (Tattoo) வச்சிருக்காரு.
தவெக கட்சி ஆரம்பிச்ச புதுசுலேயே போய்ச் சேர்ந்தாரு, மேடைக்கு மேடை கட்சிக்கும் விஜய்க்கும் ஆதரவாப் பேசுனாரு. ஆனா, இவ்வளவு பண்ணியும் அவருக்குக் கட்சியில எந்தப் பொறுப்பும் (Post) கொடுக்கலையாம்.
இதனால செம கடுப்பான பாலாஜி, கொஞ்ச நாளாவே தவெக-வை விமர்சனம் பண்ண ஆரம்பிச்சாரு. இப்போ மொத்தமா விலகிட்டாரு.
லாட்டரி அதிபர் மார்ட்டினோட பையன் ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில ‘ஜேசிஎம்’ அப்படிங்கிற அமைப்பை நடத்திட்டு இருந்தாரு. இப்போ அவர் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ அப்படின்னு புதுக் கட்சியைத் தொடங்கியிருக்காரு.
அந்தப் புதுக் கட்சியில தான் இப்போ தாடி பாலாஜி இணைஞ்சிருக்காரு. ஜோஸ் சார்லஸ் அவருக்குக் கட்சித் துண்டு அணிவிச்சு வரவேற்றாரு.
ஏற்கனவே ஜோஸ் சார்லஸ் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருந்தாரு. “நாங்க விஜய்கூட கூட்டணி வைக்கலாம்னு தான் இருந்தோம். ஆனா விஜய்யைச் சுத்தி இருக்குறவங்களும், அவரை வழிநடத்துறவங்களும் சரியில்லை. அதனால கூட்டணி பத்தி யோசிக்கணும்”னு சொல்லியிருந்தாரு.
அவர் அப்படிச் சொன்ன சில நாள்லேயே, விஜய்யோட கட்சியில இருந்த பாலாஜி அங்க போய் சேர்ந்தது அரசியல் வட்டாரத்துல செம ஹாட் டாபிக் ஆகியிருக்கு. வர்ற தேர்தல்ல தாடி பாலாஜி புதுக் கட்சிக்காக ஊர் ஊராப் போய் பிரச்சாரம் பண்ணப் போறாராம்.


