மும்பையில பதற்றம்! டைரக்டர் ரோகித் ஷெட்டி வீடு மீது துப்பாக்கிச் சூடு
மும்பையில பதற்றம்! டைரக்டர் ரோகித் ஷெட்டி வீடு மீது துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது?
இந்தி சினிமாவுல ‘சிங்கம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’னு பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் ரோகித் ஷெட்டி.
மும்பை ஜூகு (Juhu) பகுதியில இருக்குற அவரோட 9 மாடி பில்டிங்ல தான் அவர் குடும்பத்தோட தங்கி இருக்காரு.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணி இருக்கும். ரோகித் ஷெட்டி மேல் தளத்துல தூங்கிட்டு இருந்தப்போ, சில மர்ம நபர்கள் திடீர்னு அந்தப் பில்டிங் மேல சரமாரியா துப்பாக்கியால சுட்டுருக்காங்க.
துப்பாக்கி குண்டுகள் பில்டிங்கோட முதல் மாடியில இருக்குற ஜிம் (Gym) சுவரையும், பால்கனி கண்ணாடியையும் ஓட்டை போட்டுட்டு போயிருக்கு.
துப்பாக்கி சத்தம் கேட்டு பில்டிங் வாட்ச்மேன் வெளிய வர்றதுக்குள்ள அந்த கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. நல்ல வேளையா இந்தத் தாக்குதல்ல ரோகித் ஷெட்டிக்கோ இல்ல அந்த பில்டிங்ல இருக்குற வேற யாருக்கோ எந்தக் காயமும் ஏற்படல.
ரோகித் ஷெட்டி அந்த நேரத்துல தூங்கிட்டு இருந்ததா சொல்லப்படுது. தகவல் கிடைச்ச உடனே மும்பை போலீஸ் அதிகாரிகள் அங்க வந்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க. தடயவியல் நிபுணர்கள் குண்டு துளைச்ச இடங்கள்ல இருந்து ஆதாரங்களை சேகரிச்சாங்க.
சுத்தி இருக்குற சிசிடிவி கேமராக்களையும் செக் பண்ணாங்க. இந்தத் தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் காரணம்னு தெரிய வந்துருக்கு.
அவங்க தான் இதுக்கு பொறுப்பேத்துருக்காங்க. இது சம்பந்தமா 4 பேரை போலீசார் இப்போ மடக்கிப் பிடிச்சு, கொலை முயற்சி வழக்குப் பதிவு பண்ணி விசாரணை நடத்திட்டு வர்றாங்க.


