in

நெற்றில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர்கள்

நெற்றில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர்கள்

 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி மாணவிகளுக்கு நெற்றில் திலகமிட்ட ஆசிரியர்கள்…..

பிளஸ்- 2 பொதுத்தேர்வை 124 தேர்வு மையங்களில் மொத்தம் 27,198 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்…..

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச்.2-ம் தேதி இன்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

இதில் ஒரு பகுதியாக நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகள் அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதன் பின்னர் மாணவிகளுக்கு நெற்றில் திலகமிட்டு மாணவிகளுக்கு ஆசிரியர்யர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இந்தத் தேர்வில் மாணவர்கள் 13,107 பேரும், மாணவிகள் 14,091 பேரும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 420 என ஆக மொத்தம் 27,198 மாணவ, மாணவிகள் 124 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வு மையங்களில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு பணியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

What do you think?

கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள்,  திருக்கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் தரிசனம்

மரக்காணம் அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா