விருத்தாசலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினர்… விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும், விருத்தாசலம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டிப்பதாக கூறி ….. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில், தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேற்கு மாவட்டச் செயலாளர் EMR.விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவித்திட கோரியும், மணிமுத்தாற்றை தூய்மைப்படுத்தத் கோரியும், அரசு மருத்துவமனையை மேம்படுத்த கோரியும், தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


