in

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

 

செஞ்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தலையில் கருப்பு துணி கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் வல்லம் ஒன்றிய தலைவர் பூங்காவனம் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம், மேல்மலையனூர் ஒன்றியங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தலையில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 6750 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும், தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் வாக்குறுதி எண் 313 மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2.57% காரணியை நிறைவேற்ற வேண்டும், ஈமக்கிரியை செலவாக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் கருப்பு துணியை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் வீமன், வல்லம் ஒன்றிய பொருளாளர் ரமணி, வல்லம் ஒன்றிய செயலாளர் சூடாமணி உள்ளிட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

What do you think?

ரீமேக் படங்கள் தான் ஆட்சி செய்ய நிதி கொடுகிறது… பவன் கல்யாண் பல்டி

கூலி Third சிங்கள் இன்று வெளியாகிறது