in

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும்

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும்

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழாவில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினார்:

 

தமிழக அரசு சார்பில் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியாக மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 557 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக திட்டங்களை எடுத்துரைத்து எம்எல்ஏ பேசினார் தமிழக அரசின் திட்டங்களை பெற்று மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் செல்வராஜ்,கல்லூரி முதல்வர் சுவாமிநாதன்,கல்லூரி செயலர் செல்வநாயகம்,உதவி பேராசிரியர்கள் கார்த்திகேயன்,கார்த்திக்,கல்லூரிக் குழு உறுப்பினர் சிவராமன்,இயற்பியல் துறை தலைவர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா தனுஷுக்கு இல்லை

100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் திமுக அரசு ஈடுபடுவதை தடுக்கவே தற்போது புதிய முறை கொண்டுவரப்பட்டு உள்ளது.