in

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் வாய்க்காலை தூர்வாரக்கோரி வாய்க்காலில் இறங்கி அமர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது…..

தஞ்சாவூர் நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை உள்ள சாலையில் தென்புறம் செல்லும் வடிகால் வாய்க்காலில் நாணற்புல் புதர் மண்டி உள்ளது. இதிலிருந்து பிரியும் வண்ணையகரம்பை வடிகால் வாய்க்காலிலும் புதர் மண்டி உள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறது உடன் இந்த வாய்க்காலை தூர்வாரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாய்க்காலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விளையாட்டு விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கையில் கொடியுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

27 கிலோ எடையுள்ள நார்த் திசுக் கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றம்