தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை செய்த மகள்
அம்மா எனக்கு அம்மா மட்டும் இல்லாம அதையும் தாண்டி தோழி மாதிரி என்கிட்ட நடந்துப்பாங்க கல்வியிலும் விளையாட்டிலும் என்ன ஊக்கப்படுத்துவாங்க என்னோட வெற்றிக்கு காரணம் அவங்கதான் மகள் தந்த நெகிழ்ச்சி பேட்டி
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை செய்த மகள்
தமிழ்நாடு முழுவதிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி நடை பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள், அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 67 வகையான போட்டிகள் குறிப்பாக சிலம்பம் தொடு முறை, கால்பந்து குத்துச்சண்டை, கைப்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு எடை பிரிவுகளின் நடைபெற்றது.
இதில் தொடும் முறை விளையாட்டுப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் நந்தி தேவர் சிலம்ப குழு மாணவர்கள் பங்கேற்றனர் அதில் இரண்டாவது பரிசை களிமண்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடியின் மகளான மாணவி நித்யஸ்ரீ வெற்றி பெற்றார் .
இதனை நந்தி தேவர் சிலம்ப குழு சிலம்ப ஆசிரியர்கள் ராஜ்குமார், முகிலன் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மாணவி பயிலும் திணை குளம் பள்ளி ஆசிரியர்களும் கூட வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டுக்களும் மாணவிக்கு குவிந்து வருகிறது. இதனை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாணவி நித்யஸ்ரீ எனது அம்மா எனக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் உற்ற தோழியாக இருந்து எனக்கு கல்வி பயில்வதிலும் விளையாட்டு பயில்வதிலும் அடிக்கடி என்னை ஊக்கப்படுத்தி வருவார் அதற்கு கிடைத்த வெற்றி தான் இது அதுமட்டுமல்லாமல் இந்த முறை நான் இரண்டாம் பரிசு பெற்றிருக்கலாம் ஆனால் அடுத்த முறை என்னுடைய முயற்சி மற்றும் பயிற்சியினால் மாநில அளவில் வெற்றி பெற்று எனது பள்ளிக்கும் எனது அம்மா மற்றும் சிலம்ப ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்ப்பேன் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.


