தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலையை பேரூராட்சி மற்றும் நகராட்சியிலும் அமல்படுத்த கோரியும். வேலை கொடுக்க முடியாவிட்டால் நிவாரணம் வழங்க கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீதி சோழன் தலைமை வகித்தார் சி. பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலையை பேரூராட்சி மற்றும் நகராட்சியிலும் அமல்படுத்த கோரியும்,100 நாள் வேலை வழங்காத நாட்களுக்கு 100 நாள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், 100 நாள் வேலை செய்பவர்களுக்கு தீபாவளிக்கு ரூ 5000 வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.பி ஐ. மாவட்ட குழு உறுப்பினர் சர்புதீன், மாவட்ட நிர்வாக குழு இடும்பையன் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


