in

 ‘ஜனநாயகன்’ ஜுரத்துல இருக்கு  தமிழ் சினிமா


Watch – YouTube Click

 ‘ஜனநாயகன்’ ஜுரத்துல இருக்கு  தமிழ் சினிமா

 

தமிழ் சினிமாவே இப்போ ‘ஜனநாயகன்’ ஜுரத்துல தான் இருக்கு.

விஜய் சாரோட கடைசிப் படம்ங்கிறதால, தியேட்டர்ல இந்தப் படத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமா வெயிட்டிங்ல இருக்காங்க.

எச்.வினோத் – அனிருத் கூட்டணியில வர்ற இந்த படம் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகுது.

நேற்று வெளியான ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க, ஆனா திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் இதுவரை பெருசா ரியாக்ட் பண்ணாம இருந்தாங்க.

இப்போ முதல் ஆளா நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), விஜய்யை வாழ்த்தி ஒரு சூப்பரான போஸ்ட் போட்டுருக்காரு.ரவி மோகன் தன்னோட பதிவில், “தளபதி வெற்றி கொண்டான்! விஜய் அண்ணா, என்னைப் பொறுத்தவரை நீங்க ஏற்கனவே எல்லாத்துலயும் ஜெயிச்சிட்டீங்க. ட்ரெய்லர் உண்மையாவே சூப்பரா இருக்கு. இந்தப் படம் என்னையும் சேர்த்து எல்லாருடைய இதயத்தையும் கண்டிப்பா வெல்லும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. எப்போவும் நான் உங்க ரசிகனாவும், தம்பியாவும் இருப்பேன்”னு ரொம்ப எமோஷனலா சொல்லியிருக்காரு.

இசை வெளியீட்டு விழா முடிஞ்சு, இப்போ ட்ரெய்லரும் ஹிட் அடிச்சிருச்சு. மத்த நடிகர்களும் இப்போ வரிசையா வாழ்த்து சொல்ல ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்க்கப்படுது. தளபதி ரசிகர்கள் இப்போவே ஜனவரி 9-ஆம் தேதியை நோக்கி ஓடிக்கிட்டு இருக்காங்க!

What do you think?

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பொதுமக்கள் கைது.

ஓம் சக்தி பக்தர் சைக்கிளில் தேசிய கொடியை கட்டி யாத்திரை பயணம்