சுவாமி நெல்லையப்பா் திருக்கோவில் மஹா ருத்ர பாராயணம்
அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோவில் மஹா ருத்ர பாராயணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை மாவட்டம் அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோவில் ஒன்றாகும். நாயன்மாா்களால் பாடல் பெற்றதும் பழமையும் பெருமையும் வாய்ந்த சைவ திருத்தலமாகும்.
இத் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாத பிறப்பைஒட்டி உலக நன்மைக்காக மஹா ருத்ர பாராயணம் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இதற்காக நேற்று காலையில் நெல்லையப்பா் திருக்கோவிலில் மூலஸ்தானத்திற்கு முன்பு அமைந்துள்ள மஹா மண்டபத்தில் கலவ ஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் திாிசதி அா்ச்சனையுடன் துவங்கப்பட்டது.
தொடா்ந்து 60 க்கும் மேற்பட்ட வேத விற்பனா்களால் ஸ்ரீ ருத்ரஜெப ஆவா்த்திகள் 11 முறை நடைபெற்றது. ( ருத்ரத்தை ஒருமுறை ஓதி அதைத் தொடா்ந்து சமகத்தில் உள்ள முதல் பகுதியையும் ஒவ்வொரு முறை ருத்திரம் முடிந்த பின் சமகத்தில் உள்ள அடுத்த பகுதியை சோ்த்து 11 முறை கூறி பாராயணம் செய்தால் அது ருத்திர ஏகாதசி ஆகும். இதை 11 நபா்கள் ஒவ்வொருவரும் 11 முறை கூறினால் அது லகுருத்திரம் எனப்படும்.
லகுருத்திரத்தை 11 முறை கூறினால் அது மகா ருத்ரம் ஆகும். ) இரண்டாம் நாளான இன்று காலை மஹான்யாசம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீருத்ரம் 11 ஆவா்த்திகள் நடைபெற்று மகா பூா்ணாகுதி மற்றும் வசோதரை ஹோமம் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து பூஜிக்கப்பட்ட கும்ப தீா்த்தம் சுவாமி நெ்ல்லையப்பா் அன்னை காந்திமதி அம்பாள் ஆகியோருக்கு உச்சிகால பூஜையுடன் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சுவாமி நெல்லையப்பா் திருக்கோவில் அறங்காவல் குழுவினா், திருக்கோவில் நிா்வாகத்தினா் மற்றும் நெல்லை சகஸ்ரநாம மண்டலியினா் செய்திருந்தனா்.


