10 வருடங்களுக்குப் பிறகு சூர்யா தரமான சம்பவம் செஞ்சிருகார்..ரெட்ரோ movie review
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள RETRO. கார்த்திக் சுப்பராஜ்..இன் எட்டாவது படம். சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருகிறார்.ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜூஜோ ஜார்ஜ் கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சிங்கம்புலி, பிரேம் குமார், ராமச்சந்திரன், ரம்யா சுரேஷ், மற்றும் பல நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணின் இசை, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு மற்றும் ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு.அப்பாவை பறிகொடுத்து நிற்கதியாக நிற்கும் சூர்யாவை தத்தெடுத்து வளர்கிறார் ஜோ ஜோ மனைவி .சூர்யா ஜோ ஜோ..வை அப்பாவாக பார்த்தாலும் ஜோ ஜோ சூர்யாவை ஒரு அடியாளாகவே நினைத்து தனது assignement…. இக்கு சூர்யாவை பயன்படுத்துகிறார் ஒரு கட்டத்தில் சூர்யாவிற்கு பூஜா மீது காதல் வர ஆடிதடியை முட்டை கட்டி வைக்கிறார் கேரளாவில் கொள்ளையடித்த கருவுள்ள பொருட்களையும் தனது தந்தைக்கு தெரியாமல் மறைத்து வைக்க கோபமான ஜோஜோ பூஜாவைக் கொன்றால் தான் நீ வழிக்கு வருவாய் என்று கொள்ள நினைக்க ஜோஜோ கையை வெட்டுகிறார் சூர்யா கோபம் அடைந்த பூஜா அந்தமான் செல்கிறார் சூர்யாவும் சிறைக்கு சென்று விடுகிறார்.
தன் காதலி இருக்கும் இடம் தெரிந்த சூரியா அங்கு செல்ல அதே நேரத்தில் ஜொஜோ தனது கூட்டாளிகளுடன் அந்தமான் வருகிறார் .அந்தமானுக்கு செல்லும் சூர்யாவுக்கு அந்த ஊர் ரவுடியுடன் கைகலப்பு ஏற்படுகிறது ,பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் ,கருவூலம் பொருட்களை யாரிடம் ஒப்படைக்கிறார் பூஜா ..வை கைப்பிடித்தாரா? என்பதே ரெட்ரோ சொல்லும் நீதி கதை .காதல். அடிதடி என்று தனது பானையில் கார்த்திக் சுப்புராஜ் ரசிங்கபடி அழகாக விண்டேஜ் story சொல்லிருக்கிறார், கங்குவாவின் தோல்வியை மறைக்க சூர்யா ரெட்ரோ படத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கிறார். ரசிகர்களும் ரெட்ரோ சூரியாவுக்கு ரீ intro என்று கூறியிருக்கின்றனர்.
மேக் up இல்லாமல் பூஜா நடித்திருக்கிறார் ,கஷ்டங்களை பார்த்து வளர்ந்த சூர்யாவிற்கு சிரிக்க தெரியவில்லை. ஆனால் இடைவெளி ..இக்கு பிறகு சிரிக்கும் பொழுது ரசிகர்களும் காட்சிகளை ரசிக்க நிமர்ந்து உட்காருகின்றனர் சூர்யா வை தாண்டி ஜோஜோ நடிப்பு அருமை மற்றபடி நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது ,ஜெயராம் சிரிப்பு அருமை, சந்தோஷ் நாராயணன் படத்துக்கு ஏற்ப இசையில் மிரட்டி இருக்கிறார். ஸ்டோரியையும் மியூசிக்கையும் அருமையாக connect செய்திருக்கிறார் சந்தோஷம் நாராயணன் .ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா அந்தமானை கண்முன்னே காட்டி இருக்கிறார்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் ரிவ்யூ கொடுத்திருக்கின்றனர் படம் பார்த்த ரசிகர்களும் கொடுத்த காசுக்கு மேலே சுப்புராஜ் வேலை செய்து இருக்கிறார். நிச்சயம் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் என்று கமெண்ட் செய்திருகின்றனர் சூர்யாவோட என்ட்ரி செம மாஸ் ,சம்பவம் செய்திருக்கிறார், கிளைமாக்ஸ் காட்சி அல்டிமேட் , சூர்யாவோட கேரியர்ல இதுதான் பெஸ்ட் ஃபிலிம் என்ரே சொல்லலாம் சூர்யா அரக்கத்தனமாக நடித்திருக்கிறார் நாம ஒரு எக்ஸ்பெக்டேஷனோடு சென்றால் நம்மளுடைய எக்ஸ்பெக்டேஷனை விட படம் வேற லெவலில் இருக்கிறது, கதையை புராண கதைகளோடு கனெக்ட் செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜா .90 ‘s காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டது என்பதால் சூர்யாவும் 90’s kids கேட்டப்பில் அசத்தி இருக்கிறார்.
முதல் பாதி காமெடி பிளஸ் காதல் இரண்டாம் பாதி சண்டை மற்றும் ஆக்ஷன் .சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் சூர்யா haters..உம் இந்த படத்தை நம்பி பார்க்கலாம் . சூர்யாவின் அறிமுக காட்சியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருகின்றனர் ஒரு உண்மையான ஆக்சன் ஹீரோவை பெருமைப்படுத்தும் ஆக்சன் படம் 10 வருடங்களுக்குப் பிறகு சூர்யா ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். நம்பி தியேட்டருக்கு போங்க