புற்றுநோயின் கிசிச்சையில் இருந்தாலும் கடமைக்கு முக்கியதுவம் கொடுத்த சூப்பர் குட் சுப்ரமணியன்
புற்று நோயால் பாதிக்கப்பட்டிற்கும் சூப்பர் குட் சுப்ரமணியன் வெளியிட்ட வீடியோவை பார்த்த பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்திருக்கின்றனர்.
அவர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சூப்பர் குட் சுப்ரமணியன் முண்டாசுப்பட்டி, மகாராஜா, சூரரைப் போற்று என்ற படங்களில் நடித்திருக்கும் இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் திரை உலகில் நடித்து வருகிறார்.
புற்றுநோயின் கடைசி நிலையில் இருக்கும் அவர் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கிசிச்சை எடுத்துவருகிறார். தன் மறைவுக்கு பிறகு தனது குடும்பத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வெளியிட்ட பதிவின் மூலம் அவரின் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக நடிகர் கார்த்தி அறிவித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ் ,சிம்பு, சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், பாலா, இயக்குனர்கள் ஜவகர், அன்பரசு, மற்றும் நடிகர் சங்கம் என்று பலர் இவருக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தான் நடித்த கமெண்டோவின் லவ் ஸ்டோரி என்ற படத்திற்காக அவர் டப்பிங் பேசி இருக்கிறார். உடல்நிலை முடியாத நிலையிலும் கடமைக்கு முக்கியதுவம் கொடுக்கும் இவரின் உணர்வுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.