in

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடை மழை

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடை மழை

 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடை மழை மயிலாடுதுறையில் மட்டும் மூன்று சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயில் எனப்படும் கோடை வெயில் வாட்டி வதைக்கி வரும் நிலையில், கடும் வெப்பம் நிலவி வந்தது இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரென்று இரவு பலத்த இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது.

இதில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் சீர்காழி செம்பனார்கோயில் மங்கைநல்லூர், கொள்ளிடம் மணல்மேடு ஆகிய பகுதிகளில் மழை பதிவாகவில்லை இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

What do you think?

 பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் திருக்கல்யாண வைபவம்

குத்தாலத்தில்  வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டம்