கரும்பிற்கு அரசு அறிவித்துள்ள விலை முழுமையாக கிடைப்பதில்லை என கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழக அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை தொடங்கி நியாய விலை கடைகள் மூலம் வழங்கி வருகிறது

இதில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கரும்பும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கரும்பை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கு 38 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுவரை கரும்பை யாரும் வாங்க வருவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயி கூறுகையில், இன்னும் பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ளது.
ஆனால் யாரும் கரும்பை வாங்க வரவில்லை. தனியார் வியாபாரிகள் தான் கரும்பை கொள்முதல் செய்கின்றனர். நியாயவிலை கடைகளில் வழங்குவதற்காக தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.
இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு அறிவித்துள்ள 38 ரூபாய் தொகைய முழுமையாக கொடுத்து கொள்முதல் செய்வதில்லை அதில் அதிகாரிகள் – ஆளுங்கட்சியினர் வெறும் 15 ரூபாய் தான் விலை நிர்ணயம் செய்து கரும்பை கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் அரசு அறிவித்துள்ள முழுத்தொகையும் எங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

