நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்
பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் எதிரே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் அபு பாரிஸ் தலைமையில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை மயிலாடுதுறை திமுக நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான குண்டாமணி செல்வராஜ் துவக்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு தர்பூசணி நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் புதிய வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்தும் மத்திய அரசு இதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.