in

மரத்தின் அடியில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள்

மரத்தின் அடியில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள்

 

பாபநாசம் அருகே பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தின் அடியில் பாடம் கற்பிக்கும் மாணவர்களின் அவல நிலை….

அனைத்து அடிப்படை வசதிகளிலும் கூடிய புதிய கட்டிடம் கட்டித் தர பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை…….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர் ரயிலடி புதுத்தெருவில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் வழுத்தூர் ,காமராஜபுரம் ரயிலடி புதுதெரு ,செருமாக்கநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்ற இந்த பள்ளியில் தற்போது 45 மாணவ மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர் .
இப்பள்ளியில் 6 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. மற்றொரு கட்டிடம் சிதலம் அடைந்து முட்புதிர்கள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை இதுநாள் வரை கட்டப்படவில்லை என்றும், இந்தப் பள்ளியில் பாதுகாப்பான சுற்றுச்சுவர் கூட கிடையாது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மரத்தடியின் கீழே ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் பொழுது பாம்புகள் விஷ பூச்சிகள் மரத்தின் மேலே இருந்து விழுவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முறையான பாதுகாப்பான கழிவறை வசதிகள் இல்லை எனவும், பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் அட்டையில் இருப்பதால் மாணவ மாணவிகள் மதிய நேரங்களில் வெப்பம் தாங்க முடியாத சூழ்நிலையில் ஒரே ஒரு வகுப்பறையில் மட்டுமே வகுப்புகள் நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த பகுதியில் சுட்டிருக்கும் வெயில் காரணமாக மாணவ மாணவிகள் பள்ளி அருகில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயின்று வருவதாகவும்,ஒரு பள்ளி மைதானம் நடுவே சிதலமடைந்த கட்டிடம் அகற்றபடாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மாணவ மாணவிகளுக்கு குடிநீர் வசதியும் பாதுகாப்பான கழிவறை வசதியும் இல்லை என்றும், மேலும் வகுப்பறை அருகில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பள்ளியின் வகுப்பறைக்கு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இந்த பள்ளியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த பள்ளியில் சேர்க்க தயங்கி வருவதாகவும்,

எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பழமையான பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக இடித்து விட்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

500 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் – பிடாரி அம்மன் ஆலய குடமுழுக்கு விழா

பிசாசு 2 ரிலீஸ் Update