in

மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா……

மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா……

 

மடிக்கணினி வழங்க வலியுறுத்தி அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா……

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

குறிப்பாக காலை மற்றும் நண்பகல் என சுழற்சி முறையில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். திருவண்ணாமலை, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், ஆவூர், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம புற மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளங்கலை பட்டம் படிக்கும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் அனைவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுமார் 5 ஆயிரம் மடிக்கணினி வழங்கப்பட்டது.

குறிப்பாக முதுகலை பட்டப்படிப்பில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. முதுகலை மாணவ மாணவிகள் உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டமத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களாகிய தங்களுக்கு பல்வேறு செய்முறை வகுப்புகள் மற்றும் ப்ராஜெக்ட் ஆகியவை செய்வதற்கு மடிக்கணினி தங்களுக்கு அவசியம் என்றும், குறிப்பாக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு 6 லட்சம் மடிக்கணினிகள் இதுவரை வழங்கியதாகவும், 4 லட்சம் மடிக்கணினிகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார் என்றும், தமிழகம் முழுவதும் முதுகலை பட்டம் படிக்கும் மாணவ மாணவிகள் குறைந்த அளவே இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முதுகலை பட்டம் பயிலும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

What do you think?

நிலத் தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் 

ஒரே மே டையில மூணு விருதுகளைத் தட்டித் தூக்கி அசத்தியிருக்காங்க