in

தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம்

தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம்

 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நெடுஞ்சாலை துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

 

சாலை பணிகளில் பணிநீக்கம் காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிகாலமாக மாற்றி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

நான் அதிக நாள் இருக்க மாட்டேன் கதறும் நடிகர் அபிநய்…

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் திருக்கல்யாணம் விழா