in

மாநிலங்களுக்குரிய அதிகாரம் தேவை-ஹைதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி பேட்டி

மாநிலங்களுக்குரிய அதிகாரம் தேவை-ஹைதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி பேட்டி

 

புதுச்சேரி..மாநிலங்களுக்குரிய அதிகாரம் தேவை…மாநிலங்களுக்கு போதிய நிதி கிடைக்காவிட்டால் பிரச்னை தான்…புதுச்சேரி மக்களும் ஒற்றுமை இணைந்து மாநில அந்தஸ்தை கேட்க வேண்டும்…புதுச்சேரியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஹைதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி பேட்டி…

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசதுத்தீன் ஒவைசி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
முதல்முறையாக புதுச்சேரி வந்துள்ளேன்..கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி,எத்தனை இடத்தில் போட்டி என்பவை குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கையை பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என கூறிய ஒவைசி, புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருந்தாலும் ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

2025 ஆம் ஆண்டுக்குள் யூனியன் பிரதேச அரசே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நம் முன்னோர்களும் மாநிலத்துக்கு உரிய அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றுதான் பாடுபட்டனர். மத்திய தொகுப்பு நிதிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு இப்போது ரூ.3500 கோடியை அளித்து வருகிறது.

ஆனால் மத்திய அரசிடமிருந்து ரூ.750 கோடி தான் திரும்பி வருகிறது. அதனால் புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்பட அனைத்து யூனியன் பிரதேசங்களும் அதிகாரம் மிக்க சட்டப்பேரவையுடன் அதாவது மாநில அந்தஸ்து பெற்றால்தான் பிரச்னை தீரும்.

அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மக்களை ஆட்சி செய்ய முடியும். மாநில அந்தஸ்து பிரச்னை தொடர்பாக புதுச்சேரி மக்களுக்கும் ஒற்றுமையாக இணைந்து மாநில அந்தஸ்து கேட்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்குப் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்னைதான் என்றும் தெரிவித்தார்.

பிகார் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம் குறித்த கேள்விக்கு விரைவில் இறுதிப்பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்னை தொடர்பாக எங்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் ஒருவாதியாக இருக்கிறது என்றார் ஓவைசி.

What do you think?

மரகதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக் கிருத்திகையொட்டி காவடி, பாலாபிஷேகம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்