in

பாபநாசத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பாபநாசத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்….

 

கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் துவக்கி வைத்தார்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு மருத்துவம் முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி மருத்துவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இம்முகாமில் ரத்த பரிசோதனை, இஜிசி, பொது மருத்துவம்,இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், உள்பட17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளி
களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.

இம்முகாமில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மறஙஅனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What do you think?

மயிலாடுதுறையில் ஐப்பசி முதல் நாள் முன்னிட்டு பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்

நாமக்கல் பரமத்திவேலூர் அருகே கருப்பண்ண சுவாமி மண்டல பூஜை