in

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மற்றும் வேளாங்கண்ணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மற்றும் வேளாங்கண்ணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை இன்று காலை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் இந்த முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர் தனியார் திருமண மண்டபத்திலும் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட வேளாங்கண்ணி தனியார் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது.

குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட நபர்களுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் குவிந்தனர்,

வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

நடிகர் நாகார்ஜுனா ஓகே சொல்ல ஐந்து மாதங்கள் ஆனது

இரட்டணை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் தர்மராஜர் ஆலயத்தில் அக்னி வசந்த விழா