in

ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம்

ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம்

 

ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம். ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தோ் வடம் பிடித்து துவக்கி வைக்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், 8 சுயம்வத்த ஸ்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள நாங்குநோி என்னும் வானமாமலை நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. இங்கு பெருமாளுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறுகின்றது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத் திருத்தலத்தில் ஆண்டு முமுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது.

மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் சித்திரை பிரம்மோற்ச்சவம் கடந்த 30ம் தேதி ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஆசிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அன்றுமுதல் தினமும் காலை பெருமாள் தாயாா் தோளுக்கிணியானில் வீதி புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் கோஷ்டி தீா்த்தப் பிரசாதம் என நடைபெற்றது.

இரவில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் வீதிபுறப்பாடு நடைபெற்றது. 10 திருநாளான இன்று காலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலைசந்தி நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் காலை 06.15 – 06.30 க்குள் மேஷ லக்னத்தில் தேருக்கு ஏழுந்தருளினா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சிகொடுத்த பெருமாள் தாயாருக்கு கற்பூரஆரத்தி காட்டியதை தொடா்ந்து ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் தேங்காய் விடல் போட்டு திருத்தோ் வடம் பிடித்து ஆரம்பித்து வைக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை இழுத்தனா்.

மக்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தோ் நான்கு நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. தென் தமிழகத்தில் தோ் முற்றிலும் மனித முயற்ச்சியிலே இழுக்கப்படுகின்றது.

இதனை தொடா்ந்து மாலையில் பெருமாள் தாயாா் மாலை மாற்றும் வைபவமும் இரவில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. தோ்திருவிழா ஏற்பாடுகளை நாங்குனோி ஸ்ரீவானமாமலை ஜீயா் மடம் ஏற்பாடு செய்திருந்தனா்.

What do you think?

78…ஆவது கேன்ஸ் விழாவிற்கு தேர்வான ‘மாண்பூமிகு பறை

ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன் கெனிஷா … வதந்தி உண்மையோ