ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பெருவிழா 2025 பகல் பத்து இரண்டாம் திருநாள்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி பெருவிழா 2025 பகல் பத்து இரண்டாம் திருநாள்

நம்பெருமாள் இன்று திருமொழித் திருநாள் (பகல் பத்து) 2 ஆம் நாளில் முத்து பாண்டியன் கொண்டை சாற்றி, அதில் சந்திர – சூர்ய வில்லை, கலிங்கத்துராய், சிகப்பு கல் நெற்றி பட்டை சாற்றி : மகர கர்ண பத்ரம் அணிந்து திருமார்பில் – கண்டாபரணம், சந்திர ஹாரம்,ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், இரு மார்பிலும் புஜ கீர்த்தி, நெல்லிக்காய் மாலை; தங்க பூண் பவழ மாலை, வரிசையாக பெரிய சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள், 8 வட முத்து மாலை, சிகப்புக் கல் அபய ஹஸ்தம்.

அதில் கோலக்கிளி எடுத்து சாற்றி, வெண்பட்டு அணிந்து பின் சேவையில் அண்டபேரண்ட பக்க்ஷி பதக்கம் அணிந்து சேவை சாத்திக்கிறார்…
