in ,

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஆறாம் திருநாள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஆறாம் திருநாள்

 

நம்பெருமாள் இன்று (பகல் பத்து) 6 ஆம் நாளில் – திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி தொடக்கமாக” நாராயணா என்னும் நாமம்” செவிமடுக்க திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி ;

அதில் கலிங்கத்துராய் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; மகர‌ கர்ண பத்ரம் திருக்காதில் அணிந்து; கண்டாபரணம் ;

திருமார்பில் – சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் மேல் – ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்; சந்திர ஹாரம்;

தேர்ந்தெடுத்து – வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் மிக மிக நேர்த்தியாக அணிந்து : தங்கப் பூண் பவழ மாலை;

2 வட‌ முத்து மாலை; மரகத பச்சை கிளி மாலை அணிந்து வெண் பட்டு அணிந்து அதன் மேல் மஞ்சள் நிற கபா என்னும் வஸ்திரம் அணிந்து பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம் – புஜ கீர்த்தி அணிந்து சேவை சாதிக்கிறார்.

What do you think?

Roulette sicher Turnier: Das ultimative Spielerlebnis

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் திருநாள்