ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா
வைடப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம். வைடப்பாக்கம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை மங்கல இசை உடன் ஆரம்பிக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு விதமான திரவிய பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் பழங்கள் செலுத்தப்பட்டன.
தொடர்ந்து நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பரிசாஹீதி, விசேஷ மூலிகை திரவிய ஹோமங்கள் ஆகியவை நடைபெற்றன தொடர்ந்து மஹாபூரணாஹீதி செலுத்தி மந்திர புஷ்பம் நடைபெற்றது.
மேலும் தேவாரம் திருப்புகழ் ஆகியன பாடப் பெற்றன. மேலும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு யாத்ராதானம் மஹா தீர்த்த கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து காலை 10 15 மணியளவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலய கருவறை விமான கோபுர கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீ னிவாசப்பெருமாள் மகாபிஷேகம் என்னும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


