மரத்தடி ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயம் ஸ்ரீ வராகி அம்மன் கும்பாபிஷேக விழா
சித்தணி கிராமம் ஸ்ரீ வன்னி மரத்தடி ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயம் ஸ்ரீ வராகி அம்மன் கும்பாபிஷேக விழா.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் சித்தணி கிராமம் வீடூர் அணைக்கரையில் அருகே உள்ள ஸ்ரீ வன்னி மரத்தடி ஸ்ரீ சங்கரகர கணபதி ஆலய வளாகத்தில் எட்டு கைகள் கொண்ட குதிரை வாகனத்தில் நல்லாட்சி செய்யும் ஸ்ரீ வராகி அம்மன் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை கோ பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான திரவியம் பட்டு வஸ்திரங்கள் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் செலுத்தப்பட்டன.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது. மேலும் காலை பஞ்சமி திதியில் உத்திராட்டாதி நட்சத்திரத்தில் சித்தயோகத்தில் கும்பாபிஷேக பெருவிழா இனிதே நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முனைவர் ஸ்ரீ சாய் சிவகுருநாதன் அவர்கள் செய்திருந்தார்.


