in

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் நூறாவது அமாவாசையை கேக் வெட்டி சிறப்பு பூஜைகள்

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் நூறாவது அமாவாசையை கேக் வெட்டி சிறப்பு பூஜைகள்

 

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் நூறாவது அமாவாசையை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் ஞான சக்தி பீடம் அமைந்துள்ளது இந்த திருத்தளத்தில் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி அம்மன் சன்னதி மூல தெய்வமாக விளங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த திருக்கோவிலில் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி அம்மனின் நூறாவது அமாவாசையை முன்னிட்டு கேக் வெட்டி பக்தர்கள் கொண்டாடினார்கள் முதலில் யாகஸ்தலம் மிகப் பிரம்மாண்ட முறையில் அமைத்து சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு புண்ணிய தீர்த்த தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பக்தி பரவசத்துடன் அம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன மேலும் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி அம்மனின் 100 அமாவாசை தினத்தினை முன்னிட்டு பக்தர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் தேனி திண்டுக்கல் மதுரை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் முக்கிய அரசியல் பிரமுகர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

கொள்ளிடம் ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் 100 கிலோ மிளகாயை கொண்டு நிகும்பலா யாகம்

மீண்டும் பதிவு போட்ட விஜய் Antony…. முன்னாடியே தெளிவா சொல்லிருக்கலாமே … வீண் குழப்பம்