ஸ்ரீ அழகிய நாத சுவாமி திருக்கோவில் கோவில் கும்பாபிஷேம்
வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி கிராமத்தில் பன்னெடுங்காலமாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ அழகிய நாத சுவாமி திருக்கோவில் கோவில் கும்பாபிஷேம்-கழுகு பார்வை காட்சிகள்:- பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி கிராமத்தில் உள்ளபழமை வாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ அம்பிகா சமேத அழகிய நாத சுவாமி திருக்கோவில் பன்னெடுங்காலமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.
கோவில் திருப்பணி செய்யப்பட்டு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை கழுகு பார்வை காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று காலை 4ம்கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று வேத மந்திரங்கள் ஓத மேள வாத்தியங்கள் முழங்க. புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

அப்போது ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


