சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் கார் மோதி உயிரிழப்பு.
திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தைலாபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் ஒன்று கார் மோதியதில் உயிரிழந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தைலாபுரம் பகுதியில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல ஆண் புள்ளி மான் ஒன்று வேகமாக ஓடியது.

அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று மான் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலையே புள்ளி மான் உயிரிழந்தது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் மானின் உடலை சாலையோரம் கொண்டு சென்று வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து கிளியனூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.


