முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தார்.

உடன் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ்,மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


