கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் சிறப்பு யாகம்
கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் சம்வத்ராபிஷேகம் சிறப்பு சத சண்டி ஹோமம் தங்கம் வெள்ளி ஆபரணங்கள் ஹோம குண்டத்தில் போடப்பட்டு சிறப்பு யாகம் மெய்சிலிர்க்க பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக தினத்தையொட்டி சம்வத்ராபிஷேகம், சர்வமங்கள சதசண்டி ஹோமம் ஆகியவை மூன்று நாட்கள் நடந்தது.
கடந்த 18ம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வரபூஜை, ஏகதின லட்சார்ச்சனை சம்வத்ராபிஷேகம், சதசண்டி யாகம் கடஸ்தாபனத்துடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
காலை நான்காலம் கால சம்வத்ராபிஷேக யாகம் தொடங்கி கோபூஜை, கஜபூஜை, சுவாசினி, கன்யா, பிரம்மசாரி, தம்பதி பூஜை செய்யப்பட்டு சவுபாக்யவதி திரவிய சமர்ப்பணம், வசோத்தாரையுடன் சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹிதி செய்யப்பட்டு கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.
முன்னதாக நடைபெற்ற சிறப்பு சதா சண்டி ஹோமத்தில் அம்மனுக்கு பட்டுப் புடவைகள் தங்கத்தில் தாலி வெள்ளியில் கொலுசு மெட்டி உள்ளிட்ட தங்க வெள்ளி ஆபரணங்கள் பூஜை பொருள்கள் போடப்பட்டு யாகம் நடைபெற்றது. இதில் மெய்சிலிர்க்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதில் தொழிலதிபர் டெக்கான்மூர்த்தி, சிவபுரம்வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள், கிராம முக்கியஸ்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.