ஆண்டிபட்டி கன்னிமார் பாறை கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு
ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆண்டிபட்டி கன்னிமார் பாறை கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நக்கலகரடு மலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சப்த கன்னிமார்கள் மற்றும் சிவன்கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிவெள்ளி அன்று விமர்சையாக விழா நடைபெறுவது வழக்கம்
இன்று ஆடி வெள்ளியன்று சப்த கன்னிமார்கள் மற்றும் சிவனுக்கு துணியால் திரை கட்டி பால் பன்னீர் சந்தனம் விபூதி இளநீர் நெய் தேன் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்கள் கைகளில் காப்புக்கட்டி விரதம் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு திருவாசகம் மற்றும் அம்மன் பாடல்களை மனமுருகப்பாடி வழிபட்டனர்.


