in

பைரவர் ஜெயந்தி சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பைரவர் ஜெயந்தி சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

சீர்காழியில் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் விசேஷ பூஜைகளுடன், சிறப்பு வழிபாடு. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி தரிசனம்.

மயிலாடுதுறை சீர்காழியில் சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள், திரவிய பொடி பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

What do you think?

பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 125 கிலோ குட்கா பறிமுதல்