in

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை

 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை…

மேல்மலையனூர் அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற தலமாகும் இக் கோவிலில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் ராசி நட்சத்திரம் பெயர் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய தலைவர் பவித்ரா பிரசன்னவெங்கடாஜலபதி தலைமையில்,மு.பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.துரைராஜ் ஏற்பாட்டில் இன்று அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு மஞ்சள் குங்குமம். விபூதி சந்தனம்.பால். பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது …

இந்நிகழ்ச்சியில் மு.மாவட்ட செயலாளர்கள் K.R. சீனிவாசன். சாந்தம்மா. மற்றும் கொடம்பாடி சுப்பிரமணி மற்றும் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மேல்மலையனூர் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

What do you think?

நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மலையனூரில் சிறப்பு அபிஷேகம்

இட ஒதுக்கீட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி