நாமக்கல் சுண்டக்காசெல்லாண்டியம்மன் ஆலயத்தில் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம்
நாமக்கல் சுண்டக்காசெல்லாண்டியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அம்மாவாசையை முன்னிட்டு வெள்ளி கவச சிறப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் குமரிபாளையத்தில் அருள்பாலிக்கும் அம்பிகையா உள்ள அருள்மிகு சுண்டக்கா செல்லாண்டியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அம்மாவாசையை முன்னிட்டு மூலவர் சுண்டக்கா செல்லாண்டியம்மனுக்கு நல்லெண்நெய்காப்பு, பால், தயிர், பஞ்சாமிருதம், பச்சரிசிமாவு கரைசல், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக வெள்ளி கவசம் சாற்றப்பட்டு பஞ்சதீபம் உட்பட மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.
அப்போது இங்குள்ள சித்திவிநாயகர்,கருப்பண்ணசுவாமி, மதுரைவீரன் தெய்வங்களுக்கு மஹாதீபம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுண்டக்கா செல்லாண்டியம்மன் தரிசனம் பெற்றனர்.