நவராத்திரி கொலு விழா சிறப்பு அபிஷேகம் ஆராதனை
நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அருள்மிகு கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் கமலவள்ளித் தாயார், சரஸ்வதி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அரியும் சிவனும் ஒன்னு என்பதற்கினங்க,சிவனும் பெருமாலும் ஒரே கருவறையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும், பிரசித்தி பெற்ற அருள்மிகு கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் முதல் கொலு வைத்து சிவன், பார்வதி, முருகன், விநாயகர், யானை, காளைமாடு, பசு உள்ளிட்ட விலங்குகள் மனித பொம்மைகள் என பல்வேறு வகையான கடவுள் பொம்மைகள் முதல் பல வித்தியாசமான உருவங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து நவராத்திரி கொலு விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று நவராத்திரியை முன்னிட்டு கொலுவில் கமலவல்லி தாயார் காமாட்சி சரஸ்வதி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது இந்த சிறப்பு பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனையும் சிவபெருமானையும் வழிபட்டனர்.
நவராத்திரி கொலுவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது.


