in

ஆதரவற்றவர் இறந்த நிலையில் தன் குடும்பத்தினர் போல் அவரை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்

ஆதரவற்றவர் இறந்த நிலையில் தன் குடும்பத்தினர் போல் அவரை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ஆதரவற்ற ஒருவர் அனாதையாக இறந்து கிடந்த நிலையில் அதனை அறிந்து நேரில் தேடிச் சென்ற மயிலை கருனை கரங்கள் அறக்கட்டளை சமூக சேவகர் பெரம்பூர் தஞ்சை மகாதேவன் என்பவர் ஆதரவற்ற நிலையில் இறந்தவரின் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

பெரம்பூர்பகுதியி வசிப்பவர் தஞ்சை மகாதேவன். இவர் தன் மனைவியுடன் இணைந்து மயிலை கருணை கரங்கள் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் தினமும் தனது வீட்டில் சமைத்து எல்லா பகுதியிலும் ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் தேடி சென்று உணவு அளித்து வருகிறார் மேலும் 80 க்கு மேற்பட்ட ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களை அடக்கம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் அனாதை ஒருவர் இறந்து விட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை காவல் துறையினர் சொன்னதின் பேரில் அங்கு சமூக சேவகர் தஞ்சை மகாதேவனும் அவர் மனைவியும் ஓடோடி சென்று அனாதையாக ஆதரவற்ற நிலையில் பிறந்தவரின் உடலை எடுத்து சென்று தீபாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

மேலும் தன் குடும்பத்தில் ஒருவர் இறந்தால் எப்படி இறுதி சடங்கு செய்வோமோ அது செய்தது காண்போர் மனங்களில் இரக்கத்தை ஏற்படுத்தியது இவர்களின் மனிதாபிமான செயலைப் பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

What do you think?

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாக வழிபாடு

நாடார் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்