வடலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வடலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மனிஷா, நெய்வேலி சரக துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வாசகம் எழுதும்போட்டி, டாக் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கமலம் வடலூர் காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

