சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ரத்ன கர்ப மகா கணபதி மகா கும்பாபிஷேகம்
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ரத்ன கர்ப மகா கணபதி சுவாமி மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் கோகுலால் தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ ரத்ன கர்ப கணபதி சுவாமி மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஸ்ரீ ஆதிசங்கர சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது இத்திருக்கோவில் மைசூர் சிற்ப சித்தாந்தி ஶ்ரீ சித்தலிங்க சுவாமிகளால் ஸ்ரீ அபூர்வ கணபதி விக்கிரம் செய்து 1958 ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது இதனை அடுத்து 67 வருடங்களுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இத்திருகோவில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கணபதி பூஜை பூஜையுடன் துவங்கியது கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பிய நவ கலசங்களுக்கு பூமாலைகள் பட்டு வஸ்திரங்கள் வைத்து அலங்கரித்தனர்.
தொடர்ந்து பிரதான கலசதாபனம் நவக்கிரக ஹோமம குரு பிரார்த்தனை மூல மந்திர ஜெபம் கலச பூஜை அங்கள நீ ராஜனம் சதுர்வேத சேவை கும்பாபிஷேக அங்க ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று யாக குண்டத்தில் பட்டு சேலை பழங்கள் இனிப்பு வகைகள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மங்கல வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று சுவாமியை சுற்றி வலம் வந்து கணபதி விமானம் மற்றும் ஆதிசங்கரர் விமானத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீப ஆராதனை காண்பித்து விமான கலசத்திற்கு வஸ்திரங்கள் சாற்றி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டனர்.

நிறைவாக தீப ஆராத்தி காட்டி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷே விழாவை கண்டு வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மடம் மேலாளர் ராமசாமி உள்ளிட்ட விழா கமிட்டியினர் செய்தனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.


