சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் சித்திரை மாத வைபவம்
சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் சித்திரை மாத வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் சித்திரை மாத வைபவம் மற்றும்14-வது வருட சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ பெருமாள் திருக்கோயில் ப்ரதிஷ்டாதி தினத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ பெருமாளுக்கும் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கும் பால் தயிர் சந்தனம் மஞ்சள் இளநீர் தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு விசேஷமான நவகலச திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசம் கோயில் உத்திரகார மலம் வந்து மூலவர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கும் பூஜிக்கப்பட்ட கலசினீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகாதிபாரதனை பஞ்சமுக தீபாரதனை, மங்கள ஆர்த்தியும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீர்த்த ப்ரசாத கோஷ்டி வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


