ஆனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு வெள்ளி ரதம் பவனி
நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு வெள்ளி ரதம் பவனி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு வெள்ளி ரதம் பவனி நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் அம்பாளை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து அம்பாளுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஏழுமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டவுடன் மங்கள வாத்தியங்களுடன் சிவகாமி அம்பாளை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருள செய்தனர்.

பின்னர் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது வெள்ளி ரதத்தில் உலா வந்த சிவகாமியாம்பாளை ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.


