விஜய்யை ஆதரிக்கும் சிபிராஜ்..விமர்சிக்கும் திவ்யா!” சத்யராஜ் குடும்பத்தில் அரசியல் யுத்தம்?
தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லுவாங்க. இப்போ அந்த வரிசையில நம்ம ‘வில்லன் டு ஹீரோ’ சத்யராஜ் சாரோட குடும்பம் தான் சோஷியல் மீடியாவுல செம ஹாட் டாபிக்!
ஒரே வீட்டுக்குள்ள ரெண்டு வேற வேற அரசியல் கொள்கைகள் இருக்குறது தான் இப்போ பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு.முதல்ல சத்யராஜ் சாரோட மகன் சிபிராஜ்.
இவரு சின்ன வயசுல இருந்தே நம்ம தளபதி விஜய்யோட தீவிர ரசிகர்ங்கிறது எல்லாருக்கும் தெரியும். விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆரம்பிச்சதுல இருந்தே, சிபி ஓப்பனா தன் ஆதரவை கொடுத்துட்டு வர்றாரு.
“இளைஞர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு இது ஒரு நல்ல ஆரம்பம்“னு விஜய்யை பாராட்டித் தள்ளுறாரு சிபி. ஆனா இன்னொரு பக்கம், சத்யராஜ் சாரோட மகள் திவ்யா சத்யராஜ், திமுக-வுல இணைஞ்சு தீவிரமா வேலை செஞ்சுட்டு இருக்காங்க.
பல கூட்டங்கள்ல பேசி வர்ற திவ்யா, சில நேரங்கள்ல விஜய்யோட அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிச்சும் பேசியிருக்காரு. இதனால அண்ணன் ஒரு பக்கம், தங்கை ஒரு பக்கம்னு ரெண்டு பேரும் ரெண்டு துருவமா இருக்காங்க!
சமீபத்துல திமுக வேட்பாளர் லிஸ்ட் வந்தப்போ, திவ்யா சத்யராஜுக்கு தொகுதி ஒதுக்காதது பெரிய பேச்சானது.
“இவ்வளவு கஷ்டப்பட்டும் சீட் கிடைக்கலையே”ன்னு நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பிக்க, “கட்சி எனக்கு வேற பெரிய பொறுப்பு தரும்னு நம்பிக்கை இருக்கு”ன்னு ரொம்ப மெச்சூர்டா பதில் சொல்லி ஆஃப் பண்ணிட்டாரு திவ்யா.
இந்த அரசியல் மோதலால குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையான்னு கேட்டப்போ, திவ்யா கொடுத்த பதில் தான் இப்போ வைரல்:
“இந்த உலகத்துல எனக்கு பிடிச்ச ரெண்டு பேர்னா அது சத்யராஜ் சாரும், சிபிராஜ் சாரும் தான். அவங்க தான் என் உலகம்.
சிபி-க்கு நீல நிறம் பிடிக்கும்கிறதுக்காக எனக்கும் அதே தான் பிடிக்கணும்னு அவசியம் இல்லையே? நாங்க ஒரு ‘Progressive’ குடும்பம். அரசியலால எங்களுக்குள்ள எந்த மோதலும் வராது!
” அப்படின்னு ரொம்ப எதார்த்தமா பேசி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்காரு.
சினிமா பின்னணியில இருந்து வர்ற குடும்பங்கள்ல இது சகஜம்தான் என்றாலும், சத்யராஜ் குடும்பம் இதை எவ்வளவு அழகா கையாளுதுன்னு பலரும் பாராட்டிட்டு இருக்காங்க.
கொள்கை வேறயா இருந்தாலும் குடும்பம் ஒண்ணா இருக்குறது தான் ‘ரியல் மாஸ்’! முழு விவரங்களுக்கு வீடியோவை பாருங்க!


