in

ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்

ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்

ஆலப்புழாவின் ஓமனபுழாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சமீபத்தில் ஹைப்ரிட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மலையாள நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோரிடம் திங்கட்கிழமை கலால் துறையினர் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்’.

இளம் மாடலான சௌமியாவுக்கும் சம்மன் அனுப்பபட்டது, தீவிர விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்குடன் தொடர்புடைய எந்தவொரு போதைப்பொருள் வியாபாரத்திலும் அவர்கள் மூவரும் ஈடுபடவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

விசாரணையின் போது, நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனிப்பட்ட முறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார், இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஷைன் அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுடன் தொடுபுழாவில் உள்ள ஒரு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பெறும் வரை அவர் கலால் துறையின் கண்காணிப்பில் இருப்பார் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

What do you think?

இயக்குனர் ஷாஜி என் கருண் காலமானார்

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் சித்திரை மாத கிருத்திகை அபிஷேகம்