in

அச்சிறுப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

அச்சிறுப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா 

நவகிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ரெண்டரை வருடங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார்.
இதனை சனி பெயர்ச்சி என்பர். சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி பெரும் விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து  லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

இவ்விழா வில் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரம் கூறி பரிகார அர்ச்சனை செய்து கொண்டனர். விழாவை ஒட்டி பக்தர்களுக்கு எள்ளு சாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டு சென்றனர்.

What do you think?

பெண்ணாடத்தில் பிரளய காலேஸ்வரர் கோவில் விநாயகர் தேர்