in

லண்டனில் ஷாருக்கான் மற்றும் கஜோல் வெண்கலச் சிலையை திறந்து வைத்தனர்


Watch – YouTube Click

லண்டனில் ஷாருக்கான் மற்றும் கஜோல் வெண்கலச் சிலையை திறந்து வைத்தனர்

 

லண்டன்ல இருக்கிற லெஸ்டர் கொயர்ங்கிற இடம் ரொம்ப ஃபேமஸான ஒரு சுற்றுலாத் தலம். அங்க *’சீன்ஸ் இன் தி ஸ்கொயர்’*னு ஒரு பகுதி இருக்கு. அந்த இடத்துல நிறைய ஹாலிவுட் படங்கள்ல வர்ற ஃபேமஸ் நடிகர்கள், கேரக்டர்கள் சிலைகளை வெச்சிருப்பாங்க.

அங்க ஹாரிபாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன்ன்னு நிறைய சிலைகள் இருக்கு. இப்போ அந்த வரிசையில, நம்ம ஹிந்திப் படமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ இந்தி படத்துல நடிச்ச ஷாருக்கான் மற்றும் கஜோல் கேரக்டர்களோட வெண்கலச் சிலையும் வெச்சிருக்காங்க. இந்த இந்தி படம், ₹4 கோடி செலவுலதான் எடுத்தாங்க.

ஆனா, ₹102 கோடிக்கும் மேல வசூல் செஞ்சுச்சு. முக்கியமா, இந்தப் படம் கடந்த 25 வருஷமா மும்பையில இருக்குற மராத்தா மந்திர் தியேட்டர்ல தினமும் ஒரு காட்சி ஓடிட்டு இருந்துச்சு.

ஷாருக்கான், கஜோல் நடிச்ச இந்தப் படம் இப்போ 30 வருஷத்தை முடிச்சிருக்கு. அதைக் கொண்டாடுற விதமாத்தான் இந்தச் சிலையை லண்டன் லெஸ்டர் சதுக்கத்துல வெச்சிருக்காங்க.

லெஸ்டர் சதுக்கத்துல வைக்கப்படுற முதல் இந்தியப் படச் சிலை இதுதான். இந்தச் சிலையைத் திறந்து வைக்கிற விழாவுல ஷாருக்கானும், கஜோலும் நேர்ல கலந்துக்கிட்டாங்க.

What do you think?

ரேஸிங் சர்க்யூட்டில் கை அசைத்த அஜித் ரசிகர்கள் உற்சாகம்

நெய்வேலி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு